Sunday, August 09, 2009

Vadavarayai

1

வடவரையை மத்தாக்கி  வாசுகியை  நாணாக்கிக்  கடல்வண்ணன்  பண்டொருநாள்  கடல்வயிறு  கலக்கினையே  

கலக்கியகை யசோதையார்  கடைகயிர்ரால்  கட்டுண்கை  மலர்க்கமல  உந்தியாய்  மாயமோ  மருட்கைத்தே 

2

அருபொருள்  இவனென்றே  அமரர்கணம்  தொழுதேத்த  உறுபசி _ஒன்று  இன்றியே  உலகடைய  உண்டனையே  

உண்டவாய்  கலவினான்  உரிவேன்னே  உண்டவாய்  வண் துழாய்  மாலையாய்  மாயமோ  மருட்கைத்தே 

3

திரண்டமரர்  தொழுதேத்தும்  திருமால்னின்  செங்கமல  இரண்டடியான்  மூவுலகும்  இருள்தீர  நடந்தனையே  

நடந்த அடி பஞ்சவர்க்குத்  தூதாக  நடந்த  அடி  மடங்கலாய்  மாறட்டாய்  மாயமோ  மருட்கைத்தே 

4

மூவுலகும்  ஈரடியான்  முறைநிரம்பா  வகைமுடியத்  தாவிய  சேவடி   செப்பத்  தம்பியோடும்  கான்போந்து 

 சொமரனும்  போர்மடியத்  தொல்லிலங்கை  கட்டழித்த  சேவகன் சீர்  கேளாத  செவி என்ன  செவியே  திருமால் சீர்  கேளாத  செவி என்ன  செவியே 

5

பெரியவனை  மாயவனைப்  பேருலகம்  எல்லாம்  விரிகமல  உந்தியுடை  விண்ணவனைக்  கண்ணும் 

 திருவடியும்  கையும்  திருவாயும்  செய்ய  கரியவனைக்  காணாத  கண்ணென்ன  கண்ணே  கண் இமைத்துக்  காண்பார்தம்  கண்ணென்ன  கண்ணே 

6

மடம்தாழும்  நெஞ்சத்துக்  கஞ்சனார்  வஞ்சம்  கடந்தானை  நூற்றுவர்பால்  நாற்றிசையும்  போற்றப்  படர்ந்து  ஆரணம்  முழங்கப்  பஞ்சவர்க்குத்  தூது  நடந்தானை  ஏத்தாத  நாவென்ன  நாவே  நாராயணா  ஏன்னா  நாவென்ன  நாவே 

திரு இளங்கோ அடிகள்,  சிலப்பதிகாரம் 

நன்றி http://www.karnatik.com/c1473.shtml

No comments: